Pages

Thursday, March 20, 2014

ஜீவன் பேஷன் : கோடைக்கேற்ற ஆடை - லினன் ( LINEN )






சமீப காலங்களில் இந்தியாவில் பிரபலமாகி/பிரபலமாக்கப்பட்டு வரும் ஒரு வித துணி தான் லினன். அதிகமான ஆடை வடிவமைப்பாளர்கள் இதை பிரபலமாக்கி வருகிறார்கள் .

சட்டுன்னு தெரியணும்னா - நம்மூர் அரசியல்வாதிகள் அணிந்திருப்பார்களே அதேதான் .

லினன் – என்பது flax எனப்படும் ஆளிவிதைச்செடியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு இயற்கை இழை ( Natural Fiber ) . பிரேசில் , நெதர்லாந்து , பிரான்ஸ் போன்ற குளுமையான பிரதேசங்களில் விளையும் இந்த flax fiber ல் தயாரிக்கப்படும் ஆடைகள் இருபது சதவீத வாட்டர் கன்டென்ட் கொண்டவை என்பது வேறெந்த துணி வகைகளுக்கும் இல்லாத சிறப்பம்சம் .

நம்மைப் போன்ற வெந்து தணியும் வெப்ப பூமியில் வசிப்பவர்களுக்கு ஏற்றதொரு உடை லினன் . மிக விரைவாக தண்ணீரை உறிஞ்சுவது , ஒரே சீரான வெப்பத்தை தக்கவைத்துக் கொள்வது இதுவும் லினன் துணிகளின் சிறப்புகளில் சில .

போடுறவங்க போட்டாதான் லினனுக்கும் பெருமை , போடுரவங்களுக்கும் பெருமை என்று சொல்வார்கள்  . லினனின் குறை என்று பார்த்தால் – பராமரிப்பு தான் ... டபுள் ஸ்ட்ராங் இஸ்திரி போட்டாலும் , கசங்கி போன பழைய கந்தை மாதிரி தான் இருக்கும் .

ஸ்டைல் அன்ட் லுக்கை விட கம்போர்ட் & கண்வீனியன்ட் தான் முக்கியம்னு சொல்றவங்க . பராமரிப்பெல்லாம் எனக்கொரு மேட்டரே இல்லன்னு சொல்ற ஆள் நீங்கன்னா கண்டிப்பா லினன் உங்களுக்கான ஆடை . அதிகமா வெயிலில் அலைபவர்கள் , BHI அதிகமுள்ளவர்கள் அவசியம் அணிய வேண்டிய ஆடையும் கூட . Formal & Casual இரண்டிற்கும் லிணனை பயன்படுத்திகொள்ளலாம் .

லினன் - முக்கியமா கவனிக்க வேண்டியவை :

  • விலை அதிகம் ( குறைந்த பட்சம் மீட்டர் 300 ரூபாயிலிருந்து ஆயிரம் வரை ). 
  • Shrinkage அதிகமிருக்கும் என்பதினால் ,துணி வாங்கி தைப்பவர்கள் ( Tailor Made ) கண்டிப்பாக தண்ணீரில் போட்ட பிறகே தைக்கக் கொடுக்க வேண்டும் .
  • ஆயத்த ஆடை ( Ready made) வாங்குபவர்களுக்கு பிர்ச்சினை இல்லை . துணியாகவோ/ஆடையாகவோ ஏற்கனவே தண்ணீரில் போட்டு எடுத்திருப்பார்கள் .
  • லினன் துணியின் Elasticity அதிமென்பதினால் , Slim Fit ஐ தெரிவு செய்வது உத்தமம் .
  • வாங்கும் முன், நூறு சதவீத லினன் துணியா  , பிளண்டட் லினன் துணியா ( காட்டன் அல்லது பாலியஸ்டர் கலந்தது) என்று பார்த்து வாங்குவது நலம் . முன்னது விலை உசத்தி , பின்னது கொஞ்சம் குறைவு .


டிஸ்கி : ஆதித்யா பிர்லா குரூப் – லினன் கிளப் என்றே தனியானதொரு டிவிசன் ஆரம்பித்து , ( Customer made வசதியுடன் ) நாடெங்கிலும் ஷோரூமை திறந்து கொண்டிருக்கிறார்கள் . என்னவொன்று விலைதான் அதிகம் .


நீங்கள் கோவை வாசியெனில் , டவுன் ஹாலில் இருக்கும் உதய் டெக்ஸ்டைலில் உங்கள் பர்சுக்கு பங்கம் வைக்காமல் Linen துணிகளை வாங்கலாம் .



என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .



Thursday, December 12, 2013

JEEVAN FASHION STUDIO INAUGURATION - BODY SPRAY







ஒரு விஷயத்தை செய்தால் மிகச்சிறப்பாக செய்யணும் , இல்லைன்னா செய்யவே கூடாது – இந்த எண்ணத்தில் தான் இவ்வளவு நாள் இந்தப் பக்கத்தில் பதிவே எழுதாமல் இருந்தேன் . But , மிகச்சிறப்பாக செய்யப்பட்ட அல்லது செய்ததாக கருதப்பட்ட எந்த ஒரு விஷயத்திலும் , பிறிதொரு நாள் இன்னும் மிகச்சிறப்பாக செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது ன்னு சு.ரா அவர்கள் ஒரு புத்தகத்தில் எழுதியிருக்கிறார் .  So ...... J


நஞ்சு, பிஞ்சு , நாறி  உலகமே தெரிந்தாலும் நம்மாட்கள் விடாம உபயோகப்”படுத்தும்” பொருள்கள் நம்மிடையே நிறைய உள்ளது . அதில் சில முக்கியமானது ....

உள்ளாடைகள் – INNERS (பனியன் , ஜட்டி , கைக்குட்டை )
TOOTH BRUSH
காலுறை – SOCKS....

இதில் , Tooth Brush – நம்ம Subject ல Cover ஆகாது . So உள்ளாடைகள் & காலுறைகளை அடுத்தடுத்த பதிவுகளில் துவைத்து காயப்போடுவோம் .


MARKET “CAPTAIN” :




வாசனை திரவியம் – BODY SPRAY

இந்தியாவின் வாசனை திரவியங்களின் (BODY SPRAY) சந்தை மதிப்பு : 1800 கோடி .

ஆண்களுக்கான சந்தை – 1300 கோடி .

பெண்களுக்கான சந்தை – 500 கோடி .

பெண்களுக்கான சந்தை வருடா வருடம் – சுமார் பதினான்கு (14 %) சதவிகிதம் உயர்கின்றதாம் .
ஆண்களின் சந்தை உயர்வு – Less-than 1 %  - ( பசங்க குளிக்க ஆரம்பிச்சுட்டாங்களோ..? )


முதல் மூன்று BRANDS .....

பெண்கள் :

1.   EVA
2.   NIVEA
3.   FOGG

ஆண்கள் :

1.   AXE
2.   FOGG
3.   PARK AVENUE
4.   WILD STONE


தகவல் – இணையம் .


என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .



Thursday, October 10, 2013

ஜீவன் பேஷன் ஸ்டுடியோ...!





மனிதனின் அடிப்படை தேவை வரிசையில் உணவுக்கு அடுத்தது உடை , ஆனால் எம்மை போன்றவர்களுக்கு உடையின் மூலமே உணவு . அட ஆமாங்க ஜவுளித்துறையில் வேலை பார்க்கும் எங்களுக்கெல்லாம் உடையின் அல்லது அது சார்ந்த உற்பத்தி மூலம் தான் உணவுக்கான ஆதாரமே கிடைக்கின்றது .

அடிப்படையில் ஜவுளித்துறை சார்ந்த குடும்பத்தில் இருந்தோ இல்லை அது சார்ந்த படிப்போ இல்லாத பின்னணியில் இருந்து வந்தவன் . கடந்த பத்து வருடங்களாக ஜவுளித்துறையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கின்றேன் . ஜவுளித்துறை தான் ஆதாரம் என்றானவுடன் , துறை சார்ந்து ஒரு இளநிலை பட்டயப்படிப்பு முடித்து தற்போது முதுநிலை இரண்டாமாண்டு படித்துகொண்டிருக்கின்றேன் .

Fashion Designing, Fashion Photography போன்ற துறைகளின் மேல் எப்பவுமே ஒரு Grace உண்டு. ரெம்ப Stylish ஆ ஒரு Boutique ஆரம்பிக்க வேண்டும் என்பது ஆசை . அதன் தாக்கத்திலும் , ஆர்வத்திலும் இதோ இந்த தளத்தினை இன்று ஆரம்பித்திருக்கின்றேன் . Apparels & Accessories, Fabric, மற்றும் ஜவுளித்துறை சார்ந்த செய்திகளை இந்த தளத்தில் பதியலாம் என்று எண்ணியிருக்கின்றேன்.


நாய் வேஷம் போட்டா குரைச்சுத்தானே ஆகணும்னுங்குற பழமொழி போல , இதோ நான் வேஷம் போட்டுவிட்டேன் , விரைவில் குரைக்க ஆரம்பிக்க உள்ளேன் ....! நாய் போல குரைப்பேனா என்பது தெரியவில்லை .... But முயற்சி செய்கின்றேன் ....!


என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .